காஷ்மீரில் வீட்டு சிறையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரை ஆஜர்படுத்தக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு


காஷ்மீரில் வீட்டு சிறையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரை ஆஜர்படுத்தக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 24 Aug 2019 9:38 PM GMT (Updated: 24 Aug 2019 9:38 PM GMT)

காஷ்மீரில் வீட்டு சிறையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரை ஆஜர்படுத்தக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர் முகமது யூசுப் தாரிகாமி. அந்த மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், இவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சமீபத்தில் காஷ்மீர் சென்றார். ஆனால் அவர் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் முகமது யூசுப் தாரிகாமியை ஆஜர்படுத்தக்கோரி, அரசியலமைப்பு சட்டம் 32-வது பிரிவின் கீழ் சீதாராம் யெச்சூரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

முகமது யூசுப் தாரிகாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர், 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story