தேசிய செய்திகள்

ஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் - மத்திய அரசு தகவல் + "||" + Jaitley's death is unaffected: Prime Minister Modi's overseas tour will continue - Central Government Information

ஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் - மத்திய அரசு தகவல்

ஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் - மத்திய அரசு தகவல்
ஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை என்றும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி பிரான்ஸ், அமீரகம், பஹ்ரைன் நாடுகளில் கடந்த 22-ந் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பஹ்ரைன் சென்ற அவர், இன்று மீண்டும் பிரான்ஸ் செல்கிறார். அங்கு நாளை வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.


இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். எனவே அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தை பாதியில் முடித்து விட்டு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் திட்டமிட்டபடியே தொடரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அருண் ஜெட்லியின் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்துவார் என கூறப்பட்டு உள்ளது.

ஜெட்லியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், அவரது மனைவி மற்றும் மகனுக்கு தொலைபேசி வழியாக இரங்கல் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. என் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் : நிதின் கட்காரி
என் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
2. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
தமிழக பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்.பி.க்கள் சந்தித்தனர்.
3. கடற்படை வீர‌ர்களின் மதிப்புமிக்க சேவை, தியாகம் வலிமையான நாட்டை உருவாக்கி உள்ளது; பிரதமர் மோடி
கடற்படை வீர‌ர்களின் மதிப்புமிக்க சேவை, தியாகம் வலிமையான நாட்டை உருவாக்கி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
4. வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி பிரச்சினையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்தது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி பிரச்சினையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
5. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தாழ்வான பகுதிகளில் தண்ணீ்ர் தேங்கியது
புதுவை நகரம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டிய கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்து தேங்கியது..