பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்; பிரதமர் மோடி


பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Aug 2019 6:31 AM GMT (Updated: 25 Aug 2019 6:31 AM GMT)

பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையில் அகில இந்திய வானொலி வழியே மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார்.

அவர் இன்று பேசும்பொழுது, இந்தியா ஒரு பெரிய திருவிழாவிற்காக தயாராகி கொண்டிருக்கிறது.  அக்டோபர் 2ந்தேதி வரும் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த தினத்தினை பற்றி உலகம் முழுவதும் பரவலாக மக்கள் பேசி வருகின்றனர்.

சேவை செய்யும் உணர்வானது மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்துள்ளது.  அவரது 150வது ஆண்டு தின கொண்டாட்டத்தில், தூய்மையான இந்தியாவை அவருக்கு அர்ப்பணிப்பதுடன், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தினையும் நாம் தொடங்க வேண்டும்.

இந்த வருடம் காந்தி ஜெயந்தியை, அன்னை இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கொண்டாட வேண்டும் என அனைவரையும் நான் வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

Next Story