தேசிய செய்திகள்

ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை + "||" + Mother commits suicide with 3 children before jumping on train

ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பாட்னா,

பீகார் மாநிலம் ஜெகனாபாத் ரெயில் நிலையம் அருகே பாட்னா நோக்கி ‘பாலமு’ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண், 4 குழந்தைகளுடன் திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் அந்த பெண் மற்றும் 3 குழந்தைகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்றொரு குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பாட்னா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


போலீசார் விசாரணையில், 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண், 6 முதல் 12 வயது வரையிலான தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 113-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எழும்பூர் ரெயில் நிலையம் ஊழியர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்
எழும்பூர் ரெயில் நிலையம் நேற்று 113-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. ஊழியர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்
2. ரெயில்-விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம்
ஜூன் 7-ம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளநிலையில், ரயில், விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3. முழு ஊரடங்கு: 288 மின்சார ரெயில் சேவை இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
முழு ஊரடங்கு: 288 மின்சார ரெயில் சேவை இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.
4. எகிப்தில் கோர விபத்து பயணிகள் ரெயில் தடம்புரண்டு 11 பேர் சாவு
எகிப்தில் கோர விபத்து பயணிகள் ரெயில் தடம்புரண்டு 11 பேர் சாவு.
5. ரெயில்களில் ஆக்சிஜன் கொண்டு வர அனுமதிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு, மராட்டிய மாநில அரசு கோரிக்கை
ரெயில்களில் ஆக்சிஜன் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மராட்டிய அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.