மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது


மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது
x
தினத்தந்தி 26 Aug 2019 4:35 AM GMT (Updated: 26 Aug 2019 4:35 AM GMT)

மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த  எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.  நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு உள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

 பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமரின் மனைவி மற்றும் பெற்றோர்களுக்கும் இந்த வகை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.  முன்னாள் பிரதமர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொறுத்து இந்த வகை பாதுகாப்பு நீட்டிக்கப்படுகிறது. 

ஆண்டு தோறும் உளவுத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்குவது ஆய்வு செய்யப்படுகிறது.  இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.  இனிமேல், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மன்மோகன்சிங்கிற்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story