டெல்லியில் ஜல்சக்திதுறை சார்பில் நடைபெறும் ஜல்ஜீவன் மாநாட்டில் அமைச்சர் வேலுமணி பங்கேற்பு


டெல்லியில் ஜல்சக்திதுறை சார்பில் நடைபெறும் ஜல்ஜீவன் மாநாட்டில் அமைச்சர் வேலுமணி பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Aug 2019 8:39 AM GMT (Updated: 26 Aug 2019 8:39 AM GMT)

டெல்லியில் ஜல்சக்திதுறை சார்பில் நடைபெறும் ஜல்ஜீவன் மாநாட்டில் அமைச்சர் வேலுமணி பங்கேற்று உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்தார். 

அப்போது அவர், மத்திய நிதி ஆணையத்தின் தமிழகத்திற்குரிய செயலாக்க மானியமான ஆயிரத்து 196 புள்ளி 26 கோடி ரூபாயையும், அடிப்படை மானியமான  மூவாயிரத்து 780 புள்ளி 81 கோடி ரூபாயையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் மும்பை - பெங்களூரு இண்டஸ்ட்ரியல் காரிடார் திட்டத்தை கோவை வரை விரிவுப்படுத்த கோரியும், கோவையில் இருந்து டெல்லிக்கு தினசரி விமான சேவையை வலியுறுத்தியும் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை மனு அளித்தார். 

பின்னர் டெல்லியில் ஜல்சக்திதுறை சார்பில் நடைபெறும் ஜல்ஜீவன் மாநாட்டில் அமைச்சர் வேலுமணி பங்கேற்றார். தண்ணீர் பிரச்சினை, அனைவருக்கும் குடிநீர் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

Next Story