காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்: ராகுல்காந்தி


காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்: ராகுல்காந்தி
x
தினத்தந்தி 28 Aug 2019 4:42 AM GMT (Updated: 28 Aug 2019 4:42 AM GMT)

காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம் என்றும், அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  நான் இந்த அரசுடன் பல விஷயங்களில் வேறுபடுகிறேன். ஆனால்,  இந்த விவகாரத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்கிறேன். காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம். காஷ்மீர் பிரச்சினையில், பாகிஸ்தான் உள்பட எந்த ஒரு அந்நிய நாடும் தலையிட இடம் இல்லை. 

ஜம்மு காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது. அங்கு உள்ள வன்முறைகள் பாகிஸ்தான் ஆதரவுடன், தூண்டுதலுடன் நடைபெறுகிறது. பயங்கரவாதத்திற்கு முழு ஆதரவு அளிக்கும் நாடு பாகிஸ்தான் என்பது உலகம் முழுவதும் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.  காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ராகுல்காந்தி பதிவு அமைந்துள்ளதாக தெரிகிறது.

Next Story