பிளாஸ்டிக் தடை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமிர்கானுக்கு பிரதமர் மோடி நன்றி


பிளாஸ்டிக் தடை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமிர்கானுக்கு பிரதமர் மோடி நன்றி
x
தினத்தந்தி 28 Aug 2019 9:54 AM GMT (Updated: 28 Aug 2019 9:54 AM GMT)

பிளாஸ்டிக் தடை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமிர்கானுக்கு பிரதமர் மோடி நன்றியை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலி வழியே மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார்.

 அவர்  25-ம் தேதி பேசும்பொழுது, இந்தியா ஒரு பெரிய திருவிழாவிற்காக தயாராகி கொண்டிருக்கிறது.  அக்டோபர் 2ந்தேதி வரும் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த தினத்தினை பற்றி உலகம் முழுவதும் பரவலாக மக்கள் பேசி வருகின்றனர். சேவை செய்யும் உணர்வானது மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்துள்ளது.  அவரது 150வது ஆண்டு தின கொண்டாட்டத்தில், தூய்மையான இந்தியாவை அவருக்கு அர்ப்பணிப்பதுடன், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தினையும் நாம் தொடங்க வேண்டும்.

இந்த வருடம் காந்தி ஜெயந்தியை, அன்னை இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கொண்டாட வேண்டும் என அனைவரையும் நான் வேண்டுகிறேன் என கூறினார். இதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக குரல் எழுப்பி வரும் பாலிவுட் நடிகர் அமிர்கான் ஆதரவை தெரிவித்தார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ஒரே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் பிரதமர் மோடியின் திட்டம், நாம் அனைவரும் தீவிரமாக ஆதரிக்க வேண்டிய முயற்சியாகும் எனக் குறிப்பிட்டார். 

இதனையடுத்து அமிர்கானின் இந்த டுவிட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமிர்கானுக்கு நன்றி.  உங்களுடைய ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இத்திட்டத்தை வலுப்படுத்த மற்றவர்களுக்கும் ஊக்குவிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story