இந்தியாவின் இறையாண்மை தொடர்பான முடிவு, காஷ்மீர் விவகாரத்தில் ரஷியா ஆதரவு


இந்தியாவின் இறையாண்மை தொடர்பான முடிவு, காஷ்மீர் விவகாரத்தில் ரஷியா ஆதரவு
x
தினத்தந்தி 28 Aug 2019 10:04 AM GMT (Updated: 28 Aug 2019 10:04 AM GMT)

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் இறையாண்மை தொடர்பான முடிவாகும் என ரஷியா ஆதரவை தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ம் தேதி ரத்து செய்தது. 

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முயன்ற பாகிஸ்தானின் திட்டம் தோல்வியில் முடிந்தது.  இதனால் பாகிஸ்தான் கடும் விரக்தியில் உள்ளது. இவ்விவகாரத்தில் ரஷியா இந்தியாவிற்கு ஆதரவை தெரிவித்தது. இந்நிலையில்  காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் இறையாண்மை தொடர்பான முடிவாகும் என குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கான ரஷிய தூதர் நிகோலாய் குசாதேவ் பேசுகையில், “காஷ்மீர் விவகாரம் இந்திய அரசின் இறையாண்மை முடிவாகும். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும்.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களுக்கு இடையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின்படி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்,” எனக் கூறியுள்ளார். இந்தியாவில் ரஷிய தூதரகத்தின் துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின் பேசுகையில், காஷ்மீர் பிரச்சினையில் எங்கள் நாட்டுக்கு எந்த பங்கும் கிடையாது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரகசிய கூட்டம் நடைபெற்ற போதும் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்று நாங்கள் வலியுறுத்தினோம் எனக் கூறினார். 

Next Story