கோவில் அருகே இரவில் ஓய்வெடுத்த 3 பக்தர்கள் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு


கோவில் அருகே இரவில் ஓய்வெடுத்த 3 பக்தர்கள் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு
x
தினத்தந்தி 28 Aug 2019 12:39 PM GMT (Updated: 28 Aug 2019 12:39 PM GMT)

ராஜஸ்தானில் கோவில் அருகே இரவில் ஓய்வெடுத்த 3 பக்தர்கள் பாம்பு கடித்ததில் உயிரிழந்தனர்.

பிகானீர்,

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் இருந்து ஜெய்சால்மர் பகுதியில் உள்ள ராம் தேவரா கிராமத்திற்கு 3 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் செல்லும் வழியில் மோதிகார் என்ற இடத்தில் கோவில் ஒன்றின் அருகே நேற்றிரவு ஓய்வெடுக்க முடிவு செய்து அங்கு தங்கியுள்ளனர்.

ஆனால் அவர்கள் 3 பேரையும் பாம்பொன்று கடித்துள்ளது.  இதனால் உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  எனினும் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று காலை 3 பேரும் உயிரிழந்தனர்.

அவர்கள் ராஜுராம் (வயது 30), சன்னிலால் (வயது 52) மற்றும் அவரது மனைவி ரதி தேவி (வயது 50) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி பிரிவு 174ன் கீழ் போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story