தேசிய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது சகோதரருடன் சந்திப்பு + "||" + Rajinikanth visits brother at hospital

நடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது சகோதரருடன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது சகோதரருடன் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தனது சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார்.
நடிகர் ரஜின்காந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் (வயது 77).  இவருக்கு முழங்காலில் கடுமையான ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு இருந்து வந்தது.

இதனை அடுத்து அவருக்கு இன்று மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.  மும்பையில் தர்பார் படத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த சிகிச்சைக்கு பின் தனியார் மருத்துவமனை மருத்துவர் கிரண் சவுகா கூறும்பொழுது, சத்யநாராயணா நலமுடன் உள்ளார்.  அறுவை சிகிச்சை நடந்து முடிந்த அன்றே நடந்து செல்லும் வகையில் உடற்தகுதியுடன் அவர் இருக்கிறார் என தெரிவித்து உள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின் நடிகர் ரஜினிகாந்த், அவரது சகோதரர் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை வெற்றிகரமுடன் முடிந்தது என்பது வெளிப்படும் வகையில் தங்களது கட்டை விரலை உயர்த்தி காட்டினர்.  அங்கிருந்த மருத்துவர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் செல்பி எடுத்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
2. ‘அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விட மாட்டார்’ கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விடமாட்டார் என்று கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
3. திருவள்ளுவருக்கு காவி சாயம் போல, எனக்கும் பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள்- நடிகர் ரஜினிகாந்த்
எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது அது நடக்காது என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
4. நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.