தேசிய செய்திகள்

ஜம்முவில் 5 மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை துவங்கியது + "||" + Mobile phone services snapped across #JammuAndKashmir since August 5,

ஜம்முவில் 5 மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை துவங்கியது

ஜம்முவில் 5 மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை துவங்கியது
ஜம்முவில் 5 மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை துவங்கியுள்ளது.
ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.

 இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.  

இந்த நிலையில், ஜம்முவில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியுள்ளது. தோடா, கிஸ்துவார், ரம்பான்,ராஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில்  செல்போன் சேவை தொடங்கியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து: தமிழக அரசு ஏற்காததற்கு கி.வீரமணி வரவேற்பு
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்காததற்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு
ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ80 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
3. ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ள மத்திய அமைச்சரவை குழு
மத்திய அமைச்சரவை குழு, அடுத்த வாரம் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. 2019-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் அதிக எண்ணிக்கையிலான கல்வீச்சு சம்பவங்கள்
2019-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் அதிக எண்ணிக்கையிலான கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
5. நாடு முழுவதும் நடைபெறும் தொடர் போராட்டங்களால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் இழப்பு
வன்முறைகள் பரவாமல் தடுப்பதற்காக இணைய சேவை துண்டிக்கப்படுகிறது. இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன.