போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழில் அதிபர் தற்கொலை


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழில் அதிபர் தற்கொலை
x
தினத்தந்தி 29 Aug 2019 7:38 PM GMT (Updated: 29 Aug 2019 7:38 PM GMT)

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழில் அதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

பரேலி,

உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரி பிரசாத் மீனா. இவர் அங்கு வீட்டு உபயோக பொருள் விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார். வியாபாரத்தை மேம்படுத்த ராஜீவ் சாக்சேனா என்பவரிடம் ரூ.2 லட்சம் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கினார். கடந்த 2 ஆண்டுகளில் முதலும் வட்டியுமாக ரூ.4 லட்சமாக செலுத்தினார். இருந்தும் கடனை அடைக்க முடியவில்லை. ராஜீவ் சாக்சேனாவும் அவருடைய சகோதரர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமாரும், அவரை துன்புறுத்தி அவரது வீட்டை எழுதி வாங்கி உள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஹரி பிரசாத் மீனா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, ஹரி பிரசாத் மீனா பரிதாபமாக உயிர் இழந்தார்.

அவர் ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில், “நான் மன அழுத்ததில் இருக்கிறேன். எந்த நேரத்திலும் தற்கொலை செய்து கொள்வேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராஜீவ் சாக்சேனா மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரையும் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story