தேசிய செய்திகள்

நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது: காங்கிரஸ் விமர்சனம் + "||" + BJP govt pushed country into financial emergency: Cong

நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது: காங்கிரஸ் விமர்சனம்

நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது: காங்கிரஸ் விமர்சனம்
நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
புதுடெல்லி,

பொருளாதார மந்த நிலையை மறைப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து வலுக்கட்டாயமாக ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்று இருப்பதாகவும், நாட்டை நிதி நெருக்கடி நிலையை நோக்கி காங்கிரஸ் தள்ளுவதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.  தன்னிடம் உள்ள உபரி நிதிகளில் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு அளிக்க ரிசர்வ் வங்கி திங்கள்  கிழமை ஒப்புதல் அளித்தது. 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ ரிசர்வ் வங்கி அவசர நிதி ஆறு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குறைவான அளவு உள்ளது.  பாஜக அரசு, மோசமான பொருளாதார மந்த நிலையை மறைப்பதற்காக ரூ. 1.76 லட்சம் கோடி நிதியை ரிசர்வ் வங்கியிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெற்றுள்ளது. நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை மத்திய அரசு தள்ளுகிறது” என்று பதிவிட்டுள்ளார். 

வங்கி மோசடி கடந்த ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் உயர்ந்ததாக நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டி மற்றொரு பதிவிட்டுள்ள சுர்ஜேவாலா, “கொள்ளையடிப்பதும் தப்பி ஓடுவதும் புதிய இந்தியாவில் உள்ளது. இதற்கு உடந்தையாக இருக்கும் பாஜக மாற்று வழிகளை தேடுவதோடு, சாதாரண மனிதனிடம் வரியை விதிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் - பாஜக
தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறி உள்ளார்.
2. காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு?
காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
3. ஆம் ஆத்மி கட்சிக்கு குட்பை சொன்ன எம்எல்ஏ அல்கா லம்பா
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
4. பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுத்த அழைப்பை நிராகரித்த ரஜினிகாந்த்... வேகமெடுக்கிறது புதுக்கட்சி பணிகள்...
பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுக்கப்பட்ட அழைப்பை ரஜினி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வேகமெடுக்கிறது நடிகர் ரஜினியின் புதுக்கட்சி பணிகள்...
5. ‘பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது’ பா.ஜனதா குற்றச்சாட்டு
பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.