வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும்- நிர்மலா சீதாராமன்


வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும்- நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 30 Aug 2019 11:49 AM GMT (Updated: 30 Aug 2019 11:49 AM GMT)

வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி

டெல்லியில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* வங்கிகள் இணைக்கப்படுவதால் 27 பொதுத்துறை வங்கிகளில் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும் 

* 7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

* செலவினங்களை குறைக்கவும், அதிக அளவில் வங்கி சேவையை அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

* உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்படும். 

* வங்கிகள் இணைப்பால் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும்.

*  வங்கி உயர் அதிகாரிகளின் ஊதிய உயர்வை இனி நிர்வாக குழுவே முடிவு செய்யும். 

* வங்கி முடிவுகளை கண்காணித்து நெறிப்படுத்த வெளியில் இருந்து அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவர். 

* வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என கூறினார்.

Next Story