தேசிய செய்திகள்

செப்-2ல் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங் + "||" + Rajnath Singh to visit Japan and Republic of Korea from September 2

செப்-2ல் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்

செப்-2ல் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் செப்-2ல் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு 5 நாள் அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு வெளியிட்டுள்ள செய்தியில், 

இந்திய ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஜப்பான்,  தென்கொரியா நாடுகளுக்கு 5 நாள் அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். 

இந்த பயணத்தின் போது அந்நாட்டு மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் இந்திய ராணுவத்தை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துக்கிறார். ராஜ்நாத் சிங் ஜப்பான் பயணத்தின் போது அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவையும் சந்தித்து பேசுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதவை - ராஜ்நாத் சிங்
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
2. ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்
ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளார்.
3. ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார்.
4. ராஜ்நாத் சிங்குடன் ராணுவ தளபதி திடீர் சந்திப்பு; கிழக்கு லடாக்கில் சீன அத்துமீறலால் நிலவும் பதற்றம் குறித்து விளக்கம்
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை, ராணுவ தளபதி நரவனே திடீரென சந்தித்து பேசினார். அப்போது சீன அத்துமீறலால் கிழக்கு லடாக்கில் நிலவும் பதற்றம் குறித்து விளக்கினார்.
5. சாலைகள் மற்றும் பாலங்கள் தேசத்தின் உயிர்நாடி - ராஜ்நாத் சிங்
சாலைகள் மற்றும் பாலங்கள் தேசத்தின் உயிர்நாடி என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.