அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் இன்று வெளியீடு


அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் இன்று  வெளியீடு
x
தினத்தந்தி 31 Aug 2019 12:56 AM GMT (Updated: 31 Aug 2019 12:56 AM GMT)

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் இன்று வெளியாகிறது. இதன் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கவுகாத்தி, 

வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வரைவு பட்டியலில் சுமார் 41 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், இறுதிபட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. 

வரைவு பட்டியலில் விடுபட்டவர்களில், லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து கூடுதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்ககோரி மறு விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். 

இறுதிபட்டியல் வெளியிடப்படும் முன்பாக சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவது பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருப்பதால் அசாமி்ல் ஒருவித பதற்றம் நிலவுகிறது.  ஆன்லைனின் இந்தப்பட்டியல் வெளியிடப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.  அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story