மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு நெருக்கடி கொடுக்கும் மூத்த தலைவர்கள்


மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு நெருக்கடி கொடுக்கும் மூத்த தலைவர்கள்
x
தினத்தந்தி 31 Aug 2019 5:13 AM GMT (Updated: 31 Aug 2019 8:14 AM GMT)

மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

புதுடெல்லி

இந்தியாவின் பழமையான அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தற்போது நிரந்தர தலைவர் இல்லை? இது தலைமையில்லாமல்  மட்டுமல்லாமல் முழு குழப்பத்திலும் உள்ளது. சோனியா காந்தி அதன் இடைக்கால செயல் தலைவராக இருந்தாலும் அவருக்கும் மூத்த தலைவர்கள்  நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், அதன் மூத்த  தலைவர்களான ப.சிதம்பரம் மற்றும் இப்போது கர்நாடகாவின் டி.கே.சிவகுமார் போன்றவர்கள் கடுமையான சட்ட சிக்கலில் உள்ளனர்

இது இந்தியாவின் பழமையான அரசியல் கட்சியை பாதிக்கும் ஆழமான பிளவுகளை, குழப்பத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டபிரிவு   நீக்கப்பட்ட பிறகு மோடி அரசிற்கு  ஆதரவாக  பல காங்கிரஸ் தலைவர்கள்  பேசி வருகின்றனர்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூன்று முறை மக்களவை எம்.பி., சஷி தரூர்,  மோடியை புகழ்ந்ததாக கூறி  தனது சொந்த மாநிலத் தலைமையால் குறிவைக்கப்பட்டார்.  கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனால்  அவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இது போல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை புகழ்ந்ததாக கண்டனத்துக்கு உள்ளானார்.

தேசிய தலைநகரில் ஒரு புத்தக வெளியீட்டில் மோடியை புகழ்ந்த  மூத்த தலைவர்களின்  கருத்துக்களை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆதரித்தார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில்  பல்வேறு பிரிவினரிடையே கோஷ்டி பூசல் உள்ளது என  வெளியான தகவல்களுக்கு மத்தியில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் நேற்று  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஜோதிராதித்யா சிந்தியா மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டபட்டார். இதைத்  தொடர்ந்து  மாநில  கட்சிக்கு ஒரு இறுதி எச்சரிக்கை வழங்கி உள்ளார் மேலும் அவர் வேறு கட்சியில் சேரலாம் என்றும் பரவலாக  பேசப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்த கேட்ட   கேள்விக்கு பதில் அளித்த கமல்நாத்  “நான் அதை நம்பவில்லை. அப்படி நடைபெறும்  என்று நான் நினைக்கவில்லை.  என கூறினார்.

சிந்தியாவின் ஆதரவாளர்கள், மாநில அரசில் உள்ள சில அமைச்சர்கள் உள்பட, அவரை மாநிலத் தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தீர்மானிப்பதற்காக  சிந்தியாவை தேர்வுகுழு கமிட்டியின் தலைவராக்கியதற்காக  வருத்தமடைந்து உள்ளனர்.

சிந்தியாவை மத்திய பிரதேச அரசியலில் இருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு வழி இது என்று அவரது ஆதரவாளர்கள்  வாதிட்டு வருகின்றனர் .

மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு  மறைந்த அர்ஜுன் சிங்கின் மகன் அஜய் சிங் போன்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை சந்தித்த ஒரு நாள் கழித்து கமல்நாத்துடன் சோனியா காந்தி சந்தித்து உள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட அரியானா  மாநிலத் தலைவர் அசோக் தன்வாரை மாற்றுமாறு ஹூடா வலியுறுத்தி வருகிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அவர் கட்சியை விட்டு வெளியேறக்கூடும் என்பதைக் குறிக்கும் வகையில்  ஹூடா ஆகஸ்ட் 18 அன்று ரோஹ்தக்கில் பெரிய பேரணியை  நடத்தி தனது பலத்தை  காட்டி உள்ளார்.

Next Story