நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு; அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
உத்தர பிரதேசத்தில் நகைக்கடை உரிமையாளர் மீது அண்டை வீட்டுக்காரர் துப்பாக்கியால் சுடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் சிவில் லைன் பகுதியில் நகைக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கும் அவரது அண்டை வீட்டுக்காரருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில், அண்டை வீட்டுக்காரர் தனது இரு மகன்களுடன் நகைக்கடைக்காரரின் கடைக்கு சென்றார். அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசி அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது. அவர்களை தடுப்பதற்காக பெண் ஒருவரும் வந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதுபற்றிய சி.சி.டி.வி. பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story