தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜனுக்கு தலைவர்கள் வாழ்த்து


தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜனுக்கு  தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 1 Sept 2019 2:17 PM IST (Updated: 1 Sept 2019 2:17 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜனுக்கு மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழிசை சவுந்திரராஜனை   தொலைபேசியில் தொடர்பு கொண்டு  ஓ பன்னீர் செல்வம்  வாழ்த்துக்களை தெரிவித்தார்.  

அதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தமிழிசைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.   திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசை சவுந்திரராஜனுக்கு அவர்களுக்கு வாழ்த்துகள்! அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு கி.வீரமணி, வாசன், தினகரன், பிரேமலதா விஜயகாந்த், வைரமுத்து உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
  

Next Story