5-வது மற்றும் இறுதி முறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றியமைப்பு
சந்திரயான் 2 நிலவின் இறுதி சுற்றுவட்டபாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.
ஸ்ரீஹரிகோட்டா,
நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.
ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. அதன்பின் நிலவில் தரையிறங்குவதற்காக அதன் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
இன்று (செப்டம்பர் 1) சந்திராயன் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5-வது மற்றும் இறுதி முறையாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் மூலமாக நிலவின் தரைப்பகுதியை நெருங்கி வரும் சந்திரயான்-2 விண்கலமானது, வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story