மனிப்பூர்: ஹெல்மெட் அணிவதை வலியுறுத்த போலீசார் செய்த நூதன முயற்சி


மனிப்பூர்: ஹெல்மெட் அணிவதை வலியுறுத்த போலீசார் செய்த நூதன முயற்சி
x
தினத்தந்தி 1 Sept 2019 9:57 PM IST (Updated: 1 Sept 2019 9:57 PM IST)
t-max-icont-min-icon

மனீப்பூரில் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்த போலீசார் நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்த நூதன முறையை கையாண்டுள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக இனிப்புகளை வழங்கியதுடன் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். 

இது குறித்து பேசிய போலீஸ் சூப்பிரண்டு அம்ரிதா சிங், “ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஹெல்மெட் அணிவது தனிநபரின் பாதுகாப்பிற்காகத் தான். பொது மக்கள் இதனை உணர வேண்டும்.

எனவே ஒரு புதிய முயற்சியாக ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்து அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி  ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்துத்தோம்” என்றார்.

காவல்துறையின் இந்த முயற்சியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Next Story