வருமான வரி கணக்கு தாக்கலில் உலக சாதனை ஒரே நாளில் 49¼ லட்சம் கணக்குகள் சமர்ப்பிப்பு
வருமான வரி கணக்கு தாக்கலில் உலக சாதனை ஒரே நாளில் 49¼ லட்சம் கணக்குகள் சமர்ப்பிப்பு
புதுடெல்லி,
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இதனால், ஏராளமானோர் ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்வார்கள் என்பது இன்று எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் உலக சாதனை படைக்கும் அளவுக்கு ஒரே நாளில் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 கணக்குகள், ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டன. உலகத்தில் எந்த நாட்டு வருமான வரித்துறையும் ஒரே நாளில் இவ்வளவு வருமான வரி கணக்குகள் தாக்கலை கண்டிருக்காது என்று வருமான வரித்துறையை வழிநடத்தும் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
ஒரு வினாடிக்கு சராசரியாக 196 கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கணக்கு தாக்கல் செய்வதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இணையதளத்தை முடக்கும் முயற்சிகள், 2 ஆயிரத்து 205 தடவை நடந்ததாகவும், வருமான வரித்துறையின் தகவல் பாதுகாப்பு குழு அந்த முயற்சிகளை முறியடித்ததாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
மேலும், வருமான வரி செலுத்துபவர்கள், இமெயில், தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாக கேட்ட சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story