பா.ஜனதாவும், பஜ்ரங் தளமும் ‘பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இருந்து பணம் பெறுகின்றன’ திக்விஜய் சிங் சர்ச்சை கருத்து
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது பா.ஜனதா மற்றும் பஜ்ரங்தள அமைப்பு மீது குற்றம் சாட்டினார்.
பிந்த்,
அவர் கூறுகையில், ‘பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்காக இந்தியாவில் முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர்கள்தான் அதிகம் உளவு பார்க்கிறார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள். பஜ்ரங்தளம் மற்றும் பா.ஜனதா கட்சி ஆகியவை ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து பணம் பெறுகின்றன. இதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
திக்விஜய் சிங்கின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான சிவராஜ்சிங் சவுகான் பதிலடி கொடுத்துள்ளார். ‘பா.ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் தேசப்பற்றுக்கு ஒருவரும் சான்றிதழ் வழங்க தேவையில்லை’ என கூறிய அவர், இத்தகைய கருத்துகள் மூலம் திக்விஜய் சிங் நம்பகத்தன்மையை இழந்து விட்டார் எனவும் குறைகூறினார்.
இந்த நிலையில், ‘பஜ்ரங்தளம் மற்றும் பா.ஜனதா ஐ.டி. பிரிவை சேர்ந்த சிலர் ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து பணம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டனர்’ என்றுதான் கூறியதாகவும், பா.ஜனதா பணம் வாங்குவதாக கூறவில்லை என்றும் நேற்று டுவிட்டர் தளத்தில் திக்விஜய் சிங் குறிப்பிட்டு இருந்தார்.

Related Tags :
Next Story