விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 2 Sept 2019 12:01 PM IST (Updated: 2 Sept 2019 12:01 PM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் விநாயகரின் ஆசீர்வாதத்தை பெற கோயில்களுக்கு திரண்டு வருகின்றனர். இதையடுத்து தேசத்தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். கணபதி பாப்பா மோரியா!" என்று அவர் டுவிட் செய்துள்ளார்.

இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் "ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.


Next Story