தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்காலத் தடை + "||" + P Chidambaram's lawyer Kapil Sibal in Supreme Court during hearing against Chidambaram's police remand

ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்காலத் தடை

ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்காலத் தடை
ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்காலத் தடை விதித்தது.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கடந்த 21 ஆம் தேதி கைது செய்த சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கு விசாரணையின் போது சிதம்பரம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கபில் சிபல்,  சிதம்பரத்திற்கு 74 வயதுஆவதால் தயவு செய்து அவரை,  திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம். வீட்டுக்காவலில் வைத்து கூட விசாரித்து கொள்ளுங்கள், நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட கூடாது .3 நாட்களில் உலகம் தலைகீழாகத் திரும்பி விடப்போவதில்லை என வாதிட்டார். 

வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து,ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

வழக்கு விசாரணையின் போது,  சிதம்பரத்தை  வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்குமாறு அனுமதி அளிக்க வேண்டும் என  கபில் சிபல் வாதாடினார். இதுகுறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அணுகி முறையிடுமாறு அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 5-ம் தேதி வரை அதாவது மேலும் 3 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2. "கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும்"- மத்திய அரசு
கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
3. லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது
லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
4. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷணுக்கு தண்டனை என்ன? உச்ச நீதிமன்றம் இன்று அறிவிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.
5. நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நீட், ஜேஇஇ தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் திட்டமிட்ட படி நடைபெறும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.