காஷ்மீர்: 15 ராணுவ வீரர்களுக்கு டெங்கு பாதிப்பு


காஷ்மீர்: 15 ராணுவ வீரர்களுக்கு டெங்கு பாதிப்பு
x
தினத்தந்தி 3 Sept 2019 2:18 AM IST (Updated: 3 Sept 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிவரும் 15 ராணுவ வீரர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு,

எல்லைப்புறங்களில் சாலை அமைத்தல், அதை பராமரித்தல் போன்ற பணிகளை ராணுவத்தின் ஒரு பிரிவான எல்லையோர சாலை அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த 15 வீரர்கள் ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் பணியாற்றி வரும் இந்த வீரர்களுக்கு ‘டெங்கு’ பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story