முன்னாள் மத்திய மந்திரி மீதான மாணவி புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முன்னாள் மத்திய மந்திரி மீதான மாணவி புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்துக்கு சொந்தமான சட்டக்கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவி, சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி விட்டு காணாமல் போனார். அவர் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சுவாமி சின்மயானந்த் மீதான மாணவியின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரியை கொண்டு சிறப்பு புலனாய்வு குழு அமைக்குமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விசாரணையை கண்காணிக்க அலகாபாத் ஐகோர்ட்டு ஒரு அமர்வை அமைக்குமாறு கேட்டுக்கொண்டனர். மாணவியின் பாதுகாப்பை உத்தரபிரதேச அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அவருக்கு வேறு கல்லூரியில் இடம் பெற்றுத்தர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story