ரெயிலை கடக்க முயன்ற சம்பவம்: தண்டவாளத்தில் படுத்து நூலிழையில் உயிர் தப்பிய பெண்!
கர்நாடகாவில் ரெயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ஒருவர் ரெயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் படுத்து நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர்,
கர்நாடகாவில் ரெயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரெயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் படுத்து நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
ரெயில் நிலைய நடைமேடையிலிருந்து இறங்கிய பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயல்கிறார். அப்போது ரெயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது அப்போது அதிர்ச்சியடைந்த அந்த பெண் அப்படியே ரெயிலுக்கு அடியில் உடலை குறுக்கிக் கொண்டு படுத்து விடுகிறார்.
இதனை பார்த்து அங்கிருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிடும் சத்தங்களையும் வீடியோவில் கேட்க முடிகிறது. அவரை தரையுடன் ஒட்டி படுத்துவிடுமாறு பயணிகள் சிலர் கூச்சலிட, அதனை கேட்ட அந்த பெண் அவ்வாறே படுத்து உயிர் பிழைத்துள்ளார்.
பின்னர் ரெயில் முழுவதுமாக கடந்து சென்றதும், எவ்வித காயங்களும் இன்றி அந்த பெண் வெளியே வருகிறார். மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பிய பெண் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் பிழைத்துள்ளார். இதற்கு முன்பும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
Related Tags :
Next Story