தன்னை அதிகாரம் மிக்க நபர் என்று ஷமி நினைத்துக்கொண்டிருக்கிறார்; மனைவி ஆவேசம்


தன்னை அதிகாரம் மிக்க நபர் என்று ஷமி நினைத்துக்கொண்டிருக்கிறார்; மனைவி ஆவேசம்
x
தினத்தந்தி 3 Sept 2019 5:53 PM IST (Updated: 3 Sept 2019 6:00 PM IST)
t-max-icont-min-icon

தன்னை அதிகாரம் மிக்க நபர் என்று ஷமி நினைத்துக் கொண்டிருக்கிறார் என மனைவி ஆவேசமாக தெரிவித்தார்.

கொல்கத்தா, 

முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கடந்த 2018-ஆம் ஆண்டு ஷமி மீதும் அவரது குடும்பத்தார் மீதும் பல்வேறு புகார்களை  தெரிவித்தார். முகமது  ஷமியின் மூத்த சகோதரர் மீது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்றும் கொலை செய்ய முயன்றார் என்றும் புகார் அளித்தார். மேலும் முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களிடம் தொடர்பு இருப்பதாகவும் புகார் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையானது நீதிபதி சுப்தரா முகர்ஜி முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் முகமது ஷமி வெளிநாட்டில் இருப்பதால் 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும், அவரது சகோதரரை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு நீதிபதி சுப்தரா முகர்ஜி உத்தரவிட்டார்.

ஹசின் ஜகான் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ளார். “நீதித்துறைக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த ஓராண்டாக எனக்கு நீதி கிடைக்கப் போராடிக் கொண்டிருந்தேன். ஷமி, தன்னை மிகவும் அதிகாரமிக்க நபர் என்றும், பெரிய கிரிக்கெட் வீரர் என்றும் நினைக்கிறார்.

நான் மேற்கு வங்கத்தில் பிறந்திருக்கவில்லை என்றாலோ, மம்தா பானர்ஜி எனது முதல்வராக இருக்கவில்லை என்றாலோ, நான் இங்கு நிம்மதியாகவும் பாதுகாப்பாவும் வாழ்ந்திருக்க முடியாது. உத்தரபிரதேசத்தின் அம்ரோகா காவல் நிலையத்தில் என்னையும் எனது மகளையும் துன்புறத்தப் பார்த்தார்கள். கடவுளின் கருணையால் நாங்கள் தப்பித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story