மருத்துவரை தாக்கினால் இனி 10 ஆண்டு சிறை: மத்திய அரசு திட்டம் என தகவல்
மருத்துவரை தாக்கினால் இனி 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில், பணியில் இருக்கும் மருத்துவரை தாக்கினால் இனி 10 ஆண்டு சிறை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் அளவில் மத்திய சுகாதார அமைச்சகம் வரைவு மசோதா ஒன்றை தயாரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அசாமில் 73 வயதான ஓய்வு பெற்ற மருத்துவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த மசோதாவை தயாரிக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தேயிலை தோட்ட ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மருத்துவமனையில் இல்லாதது ஏன் என்று கேட்டு அந்த ஓய்வு பெற்ற மருத்துவரை அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் மருத்துவர்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் சுகாதாரப் பணி ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை மீது வன்முறையை தடுத்தல் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு மசோதா 2019 - ஐ மேம்படுத்த தேவையான யோசனைகளை மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாக அந்த துறை அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story