தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்பு


தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்பு
x
தினத்தந்தி 3 Sept 2019 8:44 PM IST (Updated: 3 Sept 2019 8:44 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

புதுடெல்லி,

தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  இதனிடையே, நேற்று முன்தினம் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்ட நிலையில் 8 ஆம் தேதி தமிழிசை பதவியேற்கிறார்.   முன்னதாக, டெல்லியில் உள்ள தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரி, தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து நியமன ஆணையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story