தேசிய செய்திகள்

மது குடிப்பதை கண்டித்த மனைவி ஆற்றில் தள்ளி கொலை + "||" + Wife who denounced the use of alcohol Dumped into the river and killed

மது குடிப்பதை கண்டித்த மனைவி ஆற்றில் தள்ளி கொலை

மது குடிப்பதை கண்டித்த மனைவி ஆற்றில் தள்ளி கொலை
மது குடிப்பதை கண்டித்த மனைவியை, அவரது கணவர் ஆற்றில் தள்ளி கொலை செய்தார்.
மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கடவலி கிராமத்தை சேர்ந்தவர் தசரத் வாகே (வயது 45). இவரது மனைவி சுரேகா (42). தசரத் வாகேவுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அவர் வழக்கம் போல மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.


இதைப் பார்த்து கோபம் அடைந்த சுரேகா அவரை கண்டித்தார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு உண்டானது.

இதில், கடும் ஆத்திரம் அடைந்த தசரத் வாகே வீட்டருகே ஓடும் பட்சா ஆற்றில் சுரேகாவை பிடித்து தள்ளிவிட்டார்.

இதில், அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் சுரேகாவை தேடினர்.

வெகு நேரத்துக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தசரத் வாகேவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளகோவிலில் கொலை செய்து புதைக்கப்பட்ட நிதிநிறுவன அதிபர் -மனைவியின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை; அக்காள் உள்பட 2 பேர் கைது
வெள்ளகோவிலில் கொலை செய்து புதைக்கப்பட்ட நிதி நிறுவன அதிபர், அவருடைய மனைவி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக நிதி நிறுவன அதிபரின் அக்காள் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. திருவெண்ணெய்நல்லூர் அருகே, செல்போன் கடை ஊழியர் அடித்துக்கொலை - 3 பேர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே செல்போன் கடை ஊழியரை அடித்துக் கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ஆவடி அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது; முன்விரோதம் காரணமாக நண்பர்கள் கொன்றார்களா? என விசாரணை
ஆவடி அருகே அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், வாலிபர்அடையாளம் காணப்பட்டார். முன்விரோதம் காரணமாக நண்பர்களே அழைத்து சென்று கொலை செய்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4. கரூர் அருகே மாயமான நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை அக்காள் வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்டதால் பரபரப்பு
கரூர் அருகே மாயமான நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை செய்யப்பட்டனர். நிதி நிறுவன அதிபரின் அக்காள் வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...