சுற்றுவட்டப்பாதை மேலும் குறைப்பு - நிலவை நெருங்குகிறது, விக்ரம் லேண்டர்
சுற்றுவட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டதால், நிலவை விக்ரம் லேண்டர் நெருங்கி உள்ளது.
பெங்களூரு,
நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த இந்த விண்கலம், கடந்த 20-ந்தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது.
அதைத் தொடர்ந்து அந்த சுற்று வட்டப்பாதை 5 முறை மாற்றி அமைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 1-ந்தேதி மாற்றி அமைத்த பின்னர் சந்திரயான்-2, நிலவுக்கு 119 கி.மீ. அருகிலும், 127 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது.
நேற்று முன்தினம் மதியம் 1.15 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டக்கலனில் (ஆர்பிட்டர்) இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது. மிகவும் சவாலான இந்தப்பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மிக நேர்த்தியாக செய்து முடித்தனர். சந்திரயான்-2 திட்டத்தில் இது ஒரு மைல் கல்.
அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர், நிலவுக்கு 119 கி.மீ. அருகிலும், 127 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது.
இந்த நிலையில் பெங்களூரு அருகே அமைந்துள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேற்று காலை 8.50 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள், உள் உந்து விசை முறையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக குறைத்தனர். அதையடுத்து நிலவுக்கு 104 கி.மீ. அருகில் விக்ரம் லேண்டர் சுற்றி வந்தது. இன்று விக்ரம் லேண்டர் நிலவுக்கு இன்னும் அருகில் கொண்டு வரப்படும்.
வரும் சனிக்கிழமை அதிகாலையில் (1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள்) விக்ரம் லேண்டர் நிலவுக்கு இன்னும் அருகே கொண்டு வரப்பட்டு, தென் துருவத்தின் மேற்பரப்பில் மெல்ல தரை இறங்கும். அடுத்த சில மணி நேரத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் என்னும் ரோவர் ரோபோ மெதுவாக தரை இறங்கும். விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் 14 நாட்கள் தங்கள் ஆராய்ச்சிப்பணியை மேற்கொள்ளும்.
சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டக்கலன் (ஆர்பிட்டர்) மட்டும் ஓராண்டு காலம் நிலவை சுற்றி வந்து ஆராய்ச்சி நடத்தும்.

Related Tags :
Next Story