காஷ்மீர் இளைஞர்கள் துப்பாக்கிகளை எடுக்க வேண்டாம், பிரகாசமான எதிர்காலத்திற்காக பாடுபடுங்கள் -இந்திய ராணுவம்


காஷ்மீர் இளைஞர்கள் துப்பாக்கிகளை எடுக்க வேண்டாம், பிரகாசமான எதிர்காலத்திற்காக பாடுபடுங்கள் -இந்திய ராணுவம்
x
தினத்தந்தி 4 Sept 2019 2:33 PM IST (Updated: 4 Sept 2019 2:33 PM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கிகளை எடுக்க வேண்டாம், பிரகாசமான எதிர்காலத்திற்காக பாடுபடுங்கள் என இந்திய ராணுவம் காஷ்மீர் இளைஞர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஸ்ரீநகர்

எக்ஸ்வி கார்ப்ஸின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் ஜீத் சிங் தில்லான், இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இளைஞர்கள் ஆயுதங்களை எடுப்பதில் ஈர்க்கப்படக்கூடாது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் ஆயுதங்களை எடுப்பதைத் தவிர்க்கவும், அதற்கு பதிலாக, பிரகாசமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் செயல்பட வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்கள் சிறந்த எதிர்காலத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டும், ஆயுதங்களை எடுப்பதில் ஈர்க்கப்படக்கூடாது.

நீங்கள் உங்கள் பெற்றோர்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பெருமைப்படுத்த வேண்டும். உலகில் எல்லா வாய்ப்புகளும் உங்கள் வீட்டு வாசலில் உள்ளன. காஷ்மீரின் இளைஞர்கள் காஷ்மீரின் எதிர்காலம் என கூறினார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 575 இளைஞர்கள் கடந்த  சனிக்கிழமை படையில் இணைந்தனர். அவர்கள் ஜம்மு-காஷ்மீர் லைட் காலாட்படையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் அஸ்வினிகுமார்  கூறியதாவது:-

இப்பகுதியில் பல ஆள் எடுப்பு முகாம்கள்  நடத்தப்படும், இது ஜம்மு-காஷ்மீரின் முகத்தை மாற்றுவதற்கான அறிகுறியாகும். வாழ்க்கையில் முன்னேற விரும்பும் அனைவருடனும் இந்திய இராணுவம் துணை நிற்கும் என்று கூறினார்.

Next Story