பஞ்சாப்பில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ரூ 2 லட்சம் நிதியுதவி - முதல் மந்திரி அறிவிப்பு


பஞ்சாப்பில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ரூ 2 லட்சம் நிதியுதவி -  முதல் மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2019 8:20 PM IST (Updated: 4 Sept 2019 8:20 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்க பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

குர்தாஸ்பூர்,

பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் என்னும் இடத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 19  பேர் பலியானார்கள். 10 க்கும்  மேற்பட்டோர்  மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி  விபத்தின்  காரணமாக உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த வேதனை அளிக்கிறது என்றும் நிவாரண முயற்சிகளுடன் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றும் பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங்  தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதி வழங்கவும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000  நிதி வழங்கவும் பஞ்சாப் முதல் மந்திரி  அமரிந்தர் சிங்  உத்தரவிட்டுள்ளார்.

Next Story