பஞ்சாப்: பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
பஞ்சாப்பில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது.
குர்தாஸ்பூர்,
பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட படாலா என்ற பகுதியில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. மக்கள் அடர்த்தியாக வாழும் குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த இந்த தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த தொழிற்சாலையில் மும்முரமாக பணிகள் நடந்து வந்தது. அந்த வகையில் நேற்றும் இந்த தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் காதுகளை செவிடாக்கும் வகையில் எழுந்த சத்தம் பல கி.மீ. சுற்றளவு வரை கேட்டது. இதனால் படாலா பகுதி முழுவதும் குலுங்கியது.
வெடிகுண்டு வெடித்தது போன்ற ஒலியுடன் நடந்த இந்த கோர விபத்தில் தொழிற்சாலை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அதில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் தங்களை காப்பாற்றுமாறு மரண ஓலம் எழுப்பினர்.
இதைப்போல பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சில தொழிலாளர்கள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர். அவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல கோரமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் தொழிற்சாலையின் அருகில் இருந்த சில வீடுகளும் சேதமடைந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகள் ஏராளமான எண்ணிக்கையில் அங்கே குவிந்தனர். பின்னர் மீட்புப்படைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி தீயணைப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.
இந்த கொடூர வெடிவிபத்தில் 19 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் ஆவர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அமிர்தசரஸ் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவிலும் தொடர்ந்து நடப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. இதைப்போல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் சிலரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து கடும் அதிர்ச்சி வெளியிட்ட முதல்-மந்திரி அமரிந்தர் சிங், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமும் அறிவித்தார்.
இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார். முன்னதாக மீட்பு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மாநில ஊரக நலத்துறை மந்திரி திரிப்த் ரஜிந்தர் சிங் மற்றும் சிறைத்துறை மந்திரி சுக்ஜிந்தர் சிங் ரந்த்வாலா ஆகியோரை அவர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், நடிகருமான சன்னி தியோலும், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இந்த பட்டாசு ஆலையை மூட வேண்டும் என கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியதாகவும், ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story