டி.கே.சிவகுமார் கைது விவகாரம்: அடிபணிய மாட்டோம், தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் - காங்கிரஸ் சொல்கிறது


டி.கே.சிவகுமார் கைது விவகாரம்: அடிபணிய மாட்டோம், தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் - காங்கிரஸ் சொல்கிறது
x
தினத்தந்தி 5 Sept 2019 1:15 AM IST (Updated: 5 Sept 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவகுமார் கைது விவகாரத்தில், அடிபணிய மாட்டோம், தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீ‌‌ஷ் திவாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

நீடித்து வரும் அரசியல் பழிவாங்கலின் சமீபத்திய உதாரணம்தான், டி.கே.சிவகுமார் கைது சம்பவம். அவர் செய்த ஒரே குற்றம், குஜராத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலின்போது, அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்தது மட்டும்தான். மோடியின் 2-வது ஆட்சிக்காலத்தின் 96 நாட்களை ‘கொடுங்கோன்மை, குழப்பம், அராஜகம்’ என்ற வார்த்தைகளால் வகைப்படுத்தலாம்.

இத்தகைய அரசியல் துன்புறுத்தல்களுக்கு காங்கிரஸ் அடிபணியாது. தொடர்ந்து கடினமான கேள்விகளை எழுப்புவோம், அதற்கு பதில் கோருவோம். அச்சுறுத்தல்களால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story