அரியான மாநில காங்கிரஸ் தலைவராக குமாரி செல்ஜா நியமனம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரியான மாநில காங்கிரஸ் தலைவராக குமாரி செல்ஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
அரியானாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மாநில காங்கிரசில் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அசோக் தன்வார் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி குமாரி செல்ஜாவை, புதிய தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்து உள்ளது.
இதைப்போல கட்சியின் சட்டசபை தலைவராக முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தேர்தல் நிர்வாகக்குழு தலைவராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவல்களை கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

Related Tags :
Next Story