ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
இ ன்று (செப்டம்பர் 5-ந்தேதி) ஆசிரியர்தினம். ஆசிரியராக தன் பணியை தொடங்கி நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளே இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், சிறந்த வழிகாட்டி, தனித்துவம் மிக்க ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், “ மாணவர்களை நல்வழிப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை கட்டமைக்க ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துவதுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story