சொகுசு இருக்கையை தவிர்த்து சாதாரண நாற்காலி கேட்டு அமர்ந்த பிரதமர் மோடி!
சொகுசு இருக்கை வேண்டாம் சாதாரண நாற்காலி போதும் என பிரதமர் மோடி கேட்டு அமர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விளாடிஸ்வோஸ்டாக்,
ரஷ்யாவின் விளாடிஸ்வோஸ்டாக் சென்று இருந்த பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் போது, அதிகாரிகள் அனைவருக்கும் நாற்காலியும் பிரதமர் மோடி அமர்வதற்கென பிரத்யேக சொகுசு சோஃபாவும் போடப்பட்டு இருந்தது.
இதைக்கவனித்த மோடி, சோஃபாவை அகற்றச் சொன்னதோடு, சாதாரண நாற்காலியே போதும் எனக் கூறி அதில் அமர்ந்து அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
PM @NarendraModi जी की सरलता का उदाहरण आज पुनः देखने को मिला, उन्होंने रूस में अपने लिए की गई विशेष व्यवस्था को हटवा कर अन्य लोगों के साथ सामान्य कुर्सी पर बैठने की इच्छा जाहिर की। pic.twitter.com/6Rn7eHid6N
— Piyush Goyal (@PiyushGoyal) September 5, 2019
இந்தக்காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மோடியின் எளிமைக்கு அளவே இல்லை , மோடியின் சிறப்பான செயல்பாடு என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மோடியை பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story