ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது -தினகரன்


ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது -தினகரன்
x
தினத்தந்தி 6 Sept 2019 1:34 PM IST (Updated: 6 Sept 2019 1:34 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று டிடிவி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் மத்திய - மாநில அரசுகள் புரிதலோடு செயல்பட வேண்டும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.  ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொருட்களில்  எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது. அடுத்த 25  ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி என்பது அவர்களுடைய ஆசை, யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

Next Story