நிலவில் தரையிறங்குவதற்கு முன் விக்ரம் லேண்டருக்கு சந்திரயான்-2 வாழ்த்து


நிலவில் தரையிறங்குவதற்கு முன் விக்ரம் லேண்டருக்கு சந்திரயான்-2 வாழ்த்து
x
தினத்தந்தி 6 Sept 2019 3:02 PM IST (Updated: 6 Sept 2019 3:02 PM IST)
t-max-icont-min-icon

நிலவில் தரையிறங்குவதற்கு முன் விக்ரம் லேண்டருக்கு சந்திரயான்-2 வாழ்த்து தெரிவிப்பது போன்ற கார்டூனை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.

பெங்களூரு,

சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளதால் அதை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

இந்தியாவின் லட்சிய சந்திர பணி சந்திரயான்-2 சந்திரனின் மேற்பரப்பில் இன்று நள்ளிரவு தரையிறங்குகிறது. இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ட்விட்டரில் ஒரு நகைச்சுவையான கார்டூன் வரைபடத்துடன் செய்தி வெளியிட்டு உள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் வரலாற்று தருணத்திற்கு முன்னதாக லேண்டருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது.

உங்களுடன் இதுவரைபயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள்! நீங்கள் விரைவில் தென்துருவத்தை அடைவீர்கள் என்று நம்புகிறேன், என்று லாண்டர் விக்ரமை வெளியிடும்போது சந்திரயான்-2 விண்கலம் கூறுகிறது. இதற்கு விக்ரம் பதிலளிக்கும் போது , "இது உண்மையில் மிகவும் நல்ல பயணம்!  நான் நீங்கள் சுற்றுப்பாதையில் சுற்றுவதை பார்ப்பேன் என கூறி உள்ளது.

இஸ்ரோ வெளியிட்டு உள்ள ட்விட்டில் விக்ரம், ஆர்பிட்டர் எங்களுக்கு அதே விருப்பம் உள்ளது. இதுவரை யாரும் போகாத  சந்திர தென் துருவத்திற்குச் சென்று அதன் பல மர்மங்களை வெளிக்கொண்டுவரும்  விக்ரம் மற்றும் பிரக்யன் ஆகியோருடன் தொடர்பில் இருக்க விரும்புகிறீர்களா? CY2 குரோனிக்கிள்சின் அடுத்த பதிப்பிற்கு காத்திருங்கள் என கூறி உள்ளது.


சந்திரயான் 2 இன் லேண்டர் விக்ரம் இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாரபாயின் பெயரிடப்பட்டு உள்ளது. இது ஒரு சந்திர நாளில் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது, இது சுமார் 14 பூமி நாட்களுக்கு சமம். பெங்களூருக்கு அருகிலுள்ள பைலாலுவில் உள்ள இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்குடன் (ஐ.டி.எஸ்.என்), அதே போல் ஆர்பிட்டர் மற்றும் ரோவர் உடன் தொடர்பு கொள்ளும் திறனை விக்ரம் கொண்டுள்ளது. 

1,471 கிலோ எடையுள்ள லேண்டர் சந்திரன் மேற்பரப்பில் மென்மையாக  தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோவர் என்ற 6 சக்கர ரோபோ வாகனம் பிரக்யன் என்ற பெயரில் 500 மீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இது சூரிய சக்தியால் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பிரக்யன் ரோவர் விக்ரமுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பு சோதனைகளை நடத்துவதற்கு செல்லும்.

இது செப்டம்பர் 2 ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டருடன் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும், இது சந்திரனைச் சுற்றி இறங்கு சுற்றுப்பாதையில் நுழைகிறது.

Next Story