டெல்லி ரெயிலில் திடீர் தீ: பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
டெல்லி புது ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி,
புதுடெல்லி புது ரெயில் நிலையத்தின் 8-வது பிளாட்பாரத்தில் கேரளா செல்லும் சண்டிகர்-கொச்சுவெலி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்தது.
இந்நிலையில், இன்ஜின் அருகே உள்ள மின்சார பெட்டியில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளில் பரவத் தொடங்கியது. மற்றபெட்டிகளில் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகள் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்தால் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story