கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடியை விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடியை விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 6 Sep 2019 7:09 PM GMT (Updated: 6 Sep 2019 7:09 PM GMT)

கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடியை விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கையும், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கையும் சந்தித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, அவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரியபோது, சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனையின்பேரில், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் ரூ.10 கோடி செலுத்தினார்.

வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய பிறகு அந்த பணத்தை திருப்பிக் கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு, கடந்த மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு, அந்த ரூ.10 கோடியை உடனடியாக விடுவிக்க மறுத்து விட்டது. இன்னும் 3 மாதங்களுக்கு அப்பணம், நிரந்தர வைப்புநிதியிலேயே இருக்கும் என்று தெரிவித்தது.


Next Story