சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வு - பெங்களூருவில் குவிந்த பத்திரிகையாளர்கள்


சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வு - பெங்களூருவில் குவிந்த பத்திரிகையாளர்கள்
x
தினத்தந்தி 6 Sep 2019 7:23 PM GMT (Updated: 6 Sep 2019 7:23 PM GMT)

சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வினை பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக பெங்களூருவில் பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர்.

பெங்களூரு,

சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வு பற்றிய செய்தி சேகரிக்கவும், படம் பிடிக்கவும் பெங்களூருவில் உள்ள பீனியா செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் குவிந்தனர். சில வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு, தனி அரங்கில் நிகழ்வை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் இருந்த அறையில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story