அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் மீது போலீசில் புகார்


அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 7 Sept 2019 4:35 AM IST (Updated: 7 Sept 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டன.

பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள இப்பிரச்சினை தொடர்பாக, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட பிரதீக் ஹஜேலா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. பட்டியலில் பெயர் விடுபட்ட சந்தன் மசும்தார் என்ற வக்கீல், திப்ருகார் போலீசில் புகார் செய்துள்ளார். பதிவேடு தயாரிப்பை கண்காணித்த பிரதீக் ஹஜேலாதான் தனது பெயர் விடுபட காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

அதுபோல், முஸ்லிம் மாணவர் அமைப்பு சார்பில் கவுகாத்தி போலீசில் அளிக்கப்பட்ட புகாரில், பிரதீக் ஹஜேலா திட்டமிட்டே ஏராளமானோரின் பெயர்களை சேர்க்காமல் விட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த புகார்கள் மீது போலீசார் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை.

Next Story