தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும் இஸ்ரோவின் சந்திரயான்-2 மிஷன் தோல்வி அல்ல


தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும் இஸ்ரோவின்  சந்திரயான்-2 மிஷன் தோல்வி அல்ல
x
தினத்தந்தி 7 Sept 2019 10:55 AM IST (Updated: 7 Sept 2019 2:48 PM IST)
t-max-icont-min-icon

விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும் இஸ்ரோவின் சந்திரயான்-2 மிஷன் தோல்வி அல்ல.

பெங்களூரு

சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

வெறும் ரூ.978 கோடியில், ஹாலிவுட் வெற்றிப்படம் அவெஞ்சர்ஸ் என்ட் கேம்-ஐ விட குறைந்த பட்ஜெட்டில், சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் செயல்படுத்தியதைக் கண்டு உலக  விஞ்ஞானிகள் வியக்கிறார்கள்.  சந்திரயான் 2 பணிக்கு சுமார் 140 மில்லியன் டாலருக்கும் குறைந்த அளவு செலவுதான் ஆகி உள்ளது. செவ்வாய் கிரகம் உள்ளிட்ட எதிர்கால விண்வெளி ஆய்வு பணிகளுக்கும் இந்த பணி பெரும் முக்கியத்துவம்  வாய்ந்தது.  அமெரிக்கா தனது அப்பல்லோ பணிக்காக 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழித்தது.

இந்த திட்டத்தில் இந்தியாவின் ஒவ்வொரு அசைவையும் உலக நாடுகள் கண்காணித்து வருகின்றன. சந்திரனின் தென் துருவத்தை தொடுவதற்கு சற்று முன்பு சந்திராயன்-2 லேண்டர் விக்ரமுடன் தொடர்பை இழந்தது.

சந்திரனில் தரையிறங்க இந்தியாவின் முதல் முயற்சி ஸ்கிரிப்ட்டாக இல்லாமல் போயிருக்கலாம், ஆனால் லட்சிய சந்திரயான் 2 பணி தோல்வியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.

சந்திரனில் விக்ரம் லேண்டர் இறங்குவதில் தோல்வி ஏற்பட்டாலும் இந்த திட்டத்திற்கு ஒரு வருடம் பணி ஆயுள் இருப்பதால் சந்திரயான் 2 சுற்றுப் பாதை நடவடிக்கையில் தொடர்ந்து இருக்கும். தூரத்திலே இருந்து நிலவை கணிகாணிப்பது  தொடரும்.

5 சதவிகித பணிகள் மட்டுமே இழக்கப்பட்டுள்ளன. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யன் ரோவர் மீதமுள்ள 95 சதவீதம் அதாவது சந்திரயான் 2  சந்திரனை வெற்றிகரமாக சுற்றுகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்  இஸ்ரோ அதிகாரி தெரிவித்து உள்ளார்.

சந்திரயான் -2 சுற்றுப்பாதை நிலவின் பல படங்களை எடுத்து அடுத்த ஆண்டு இஸ்ரோவுக்கு அனுப்பலாம். சுற்றுப்பாதை அதன் நிலையை அறிய லேண்டரின் படங்களை எடுக்க முடியும் என்று இஸ்ரோ அதிகாரி மேலும் கூறினார்.  லேண்டருக்குள் இருந்த ரோவரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே.

Next Story