காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது மோடியின் உறுதி தன்மையை காட்டுகிறது; உத்தவ் தாக்கரே


காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது மோடியின் உறுதி தன்மையை காட்டுகிறது; உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 7 Sept 2019 8:08 PM IST (Updated: 7 Sept 2019 8:08 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பு 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது மோடியின் உறுதி தன்மையை காட்டுகிறது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது:-

பாஜக - சிவசேனா தலைமையிலான கூட்டணி வருகின்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அயோத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நிச்சயமாக ராமர் கோவில் கட்டப்படும் என்று உறுதியாக கூறுகிறேன். 

பிரதமர் மோடி இங்கு வரும்போது நான் எத்தனை முறை ஆனாலும் நன்றி கூறுவேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது என பல நடவடிக்கைகள் மோடி அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

அதுபோல் அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டப்படும்” அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சிவசேனா எப்போதும் உறுதியாக உள்ளது.  

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story