தெலுங்கானாவில் கோவில் தூணில் முதல்-மந்திரி உருவம்: பா.ஜ.கவினர் போராட்டம்


தெலுங்கானாவில் கோவில் தூணில் முதல்-மந்திரி உருவம்: பா.ஜ.கவினர் போராட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2019 9:07 PM IST (Updated: 7 Sept 2019 9:07 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் லட்சுமி நரசிம்ம கோவில் தூணில், அரசின் அடையாளங்கள் செதுக்கப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் யாதகிரிகுட்டா பகுதியில் உள்ள புகழ்பெற்ற  லட்சுமி நரசிம்ம கோவில் தூணில், அரசின் அடையாளங்களான மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் உருவம், தெலுங்கானா மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கான அடையாளங்கள், ஐதராபாத் நகரின் அடையாளமாக திகழும் சார்மினார் கட்டிடம்  போன்ற அத்துமீறல்களுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட கல் தூண்கள் கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

முதல்-மந்திரியின் உருவம் செதுக்கப்பட்டதைக் கண்டித்து, பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென கோபுரத்தின் மீது ஏறி போராட முயன்றவர்களை, தடுத்து நிறுத்திய சிறப்பு அதிரடிப்படை, அங்கிருந்து அவர்களை விரட்டியடித்தனர். இதன் காரணமாக இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story